நோயைப் பற்றி


                                 சர்க்கரை நோய் (அ) நீரிழிவு நோய் என்பது ஒரு குறைபாடு. நம் உடம்பில் உள்ள கணையம் ( pancreas ) என்னும் உறுப்பு இன்சுலின் ( insulin ) என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் தான் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை, உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச்சென்று பயன்படுத்தச்செய்கின்றது. இதன்மூலம் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றது.
                  
                    இந்த இன்சுலின் சரியான அளவில் சுரக்காவிட்டால் (அ) சரியாக வேலை செய்யாமல் போய்விட்டால் நமது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிவிடுகிறது. இதை நாம் சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம். ஒரு உறுப்பில் ஏற்படும் ஒரு குறையினால் இது வருவதால், இதனை நாம் குறைபாடு என்றும் அழைக்கலாம். நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால், அதிகப்படியான சர்க்கரை சிறுநீரில் வெளியேறுகிறது. எனவே இதை நாம் நீரிழிவு நோய் என்றும் அழைக்கிறோம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக