வெள்ளி, 8 ஏப்ரல், 2011

தமிழில் ஒரு முதல் முயற்சி.

சர்க்கரை நோயாளிகளுக்காக தமிழில் ஒரு வலைத்தளம் துவங்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக என்னுடைய நோயாளிகள் மற்றும் நண்பர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் இவ்வலைத்தளத்தில் எழுத துவங்கியுள்ளேன். வாசகர்கள் தங்களுடைய சந்தேகங்களைக் கேட்கலாம். முடிந்தவரை விரைவாக பதிலளிக்க முயற்சி செய்கிறேன். சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி வளமாக வாழ்வதற்கும், பொதுமக்கள் சர்க்கரை நோய் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு இந்நோய் வராமல் தடுப்பது எப்படி என்று அறிந்து கொள்வதற்கும் உதவி செய்வதே இவ்வலைத்தளத்தின் நோக்கம். வாங்க எழுதலாம்!!!!!